தமிழ்நாடு

மாட்டு தொழுவத்தில் தீ விபத்து - 6 பசு மாடுகள் கருகி பலி

தந்தி டிவி

நீலகிரியில் மாட்டுத்தொழுவத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சூர் அருகே குந்தாபாலத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அவரிடம் 6 பசு மாடுகள் இருந்த நிலையில், குந்தா அணை ஒட்டிய தனது மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்துள்ளார்.

மின் இணைப்பு இல்லாத நிலையிலும் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க முயன்றும் முடியாததால், 6 பசுமாடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து மஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை