ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணை வளாகத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பண்ணை வளாகத்தில் இருந்த சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான தீவனப்புல் மளமளவென எரிந்து கருகியது. கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.