தமிழ்நாடு

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு - திடீர் வெடிவிபத்தால் 3 வீடுகள் தரைமட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 வீடுகள் தரைமட்டமானது.

தந்தி டிவி
சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி பகுதியில் வசிக்கும் முனியசாமி என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று மாலை பட்டாசு தயாரித்தபோது, உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த குடியிருப்புகளுக்கும் தீ பரவியது. இதில் அந்த பகுதியில் உள்ள 3 வீடுகள் தரைமட்டமானது. தகவலறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அனைத்தனர். இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்