தமிழ்நாடு

நிதி நிறுவன அதிபர் வீட்டில்.. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்.. தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார்.

தந்தி டிவி

ஓட்டன்சத்திரம் அருகேயுள்ள அத்திக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருடைய கணவர் கும்பகோணத்தில் தங்கி நிதி நிறுவனம் நடத்தி வரும் நிலையில், விஜயலட்சுமி தன் மகளுடன் அத்திக்கோம்பை முத்துநகரிலே தனியே வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், அதிகாலை திடீரென வீட்டிற்குள் புகுந்த இரு மர்மநபர்கள், விஜயலட்சுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலி உட்பட பீரோவில் இருந்த 27 சவரன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றதாகவும் கூறப்படுகிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்