தமிழ்நாடு

ஸ்ரீவைகுண்டம்: டிஎஸ்பிக்கு எதிராக ஆய்வாளர் போர்க்கொடி

ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி பகை உணர்வுடன், தகாத வார்த்தைகளால் திட்டுவதாக காவல் ஆய்வாளர் ஒருவர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
செய்துங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு சென்ற ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் ரகுராஜன் பணியில் இல்லை என அலுவலக குறிப்பேட்டில் எழுதியுள்ளார். மேலும், வாக்கி டாக்கியில் ஆய்வாளர் ரகுராஜனை அழைத்து, கடுமையான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆய்வாளர் ரகுராஜன் அலுவலக பொது குறிப்பேட்டில், டி.எ​ஸ்.பி சுரேஷ்குமார், தனது மாமியாரின் நெருங்கிய சித்தப்பா மகன் என்றும் குடும்ப பகை காரணமாக, தனிப்பட்ட முறையில் தம்மை தகாத வார்த்தையால் திட்டி அவமானப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்வதாக பொதுகுறிப்பேட்டில் அவர் எழுதி வைத்துள்ளார். டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் ரகுராஜன் இடையிலான இந்த மோதல், காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்