நடுக்கடலில் தீப்பற்றிய சென்னை மீனவர்களின் பைபர் படகு
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த, சென்னை மீனவர்களின் பைபர் படகில் திடீரென தீ பற்றியது. திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சென்ற படகின் இஞ்சினில் தீப்பிடித்து, படகு முழுவதும் எரிந்துள்ளது. உடனே மீனவர்கள் கடலில் குதித்த நிலையில், அவ்வழியே சென்ற பழவேற்காடு மீனவர்கள் தங்கள் படகில் ஏற்றி அவர்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதில் ஜெகன் மதியழகன் என்பவர் கையில் தீக்காயம் ஏற்பட்டது.