தமிழ்நாடு

திருவிழாவில் நடனமாடிய கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவிழாவில் நடனமாடிய கலைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

thanthitv

கரூரில் கோயில் திருவிழாவில் நடனமாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு நடன கலைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், மணவாசி பகுதியை சேர்ந்த ஜீவா என்ற நடனக் கலைஞர் நேற்று இரவு தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கோவில் கும்பாபிஷேக விழாவில் தமது குழுவினருடன் நடனமாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மேடையிலேயே ஜீவா திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

கோவில் திருவிழாவில் நடனமாடிக் கொண்டிருந்த, நடன கலைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது, சக நடன கலைஞர்களையும் ஊர் பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்துள்ளது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்