தமிழ்நாடு

பண்டிகை சீசன் எதிரொலி - தங்கம் விலை உயர்வு

தங்கத்தின் விலை கடந்த 1 மாதத்தில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது

தந்தி டிவி

* இந்தியாவில் பண்டிகை சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து தங்கத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது.

* தேவை அதிகரித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இம்மாத துவக்கத்தில் 2 ஆயிரத்து 915 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் தற்போது 3 ஆயிரத்து 52 ரூபாயாக அதிகரித்துள்ளது.

* அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 96 ரூபாய் அதிகரித்து 24 ஆயிரத்து 416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே காலத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து 41 ரூபாய் 70 காசுகளாக உள்ளது.

* தீபாவளி பண்டிகை மற்றும் தொடர்ந்து வரும் திருமண சீசன் ஆகிய காரணங்களால் தேவை அதிகரித்துள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவி்த்துள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்