தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் யூரியா, டி.ஏ.பி போன்ற உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார் தெரிவித்தனர். இதனால் விவசாய பணிகளை தொடங்க முடியவில்லை என தெரிவித்த விவசாயிகள், உரத்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆட்சியர் சந்தீப் நந்தூரியை தீடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.