தமிழ்நாடு

பெண் மற்றும் இளைஞர் தற்கொலை - தகாத உறவால் விபரீதம்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் குறிஞ்சி கங்காபுரத்தைச் சேர்ந்த ஜே.சி.பி ஓட்டுநரான சிவகுமாருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பவருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தம்பதிகளுக்குக் ஒரு குழந்தை உள்ள நிலையில் சிவகுமார் கடந்த சில மாதங்களாக டெல்லியிலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மனைவிக்கு உதவுமாறு ஊரில் உள்ள தனது நண்பரான ஹரீஷிடம், சிவகுமார் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடிக்கடி சிவக்குமாரின் வீட்டுக்குச் சென்று வந்த ஹரீஷுடன் திலகவதிக்கு தகாத உறவு ஏற்பட்டு இருக்கிறது. இதனை அறிந்த சிவகுமார் மனைவியைக் கண்டித்து தாய் வீட்டிற்கு அனுப்பிய நிலையில் திலகவதி அங்குத் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த ஹரீஷும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக திலகவதியின் உடலை போலீசாருக்கு தெரிவிக்காமல் சிவகுமார் தரப்பு அடக்கம் செய்ய முயன்றதும், இதுகுறித்து தகவல் கிடைத்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே திலகவதியின் உடலை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி ஆம்புலன்ஸ் வாகனத்தைத் துரத்தியதால், ஆம்புலன்ஸ் ஒட்டுநர் சடலத்துடன் காவல் நிலையத்தில் நின்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு