தமிழ்நாடு

Thiruvannamalai Police Issue | அம்பலமான பெண் SI - அஸ்ரா கார்க் IG எடுத்த அதிரடி முடிவு

அம்பலமான பெண் SI - அஸ்ரா கார்க் IG எடுத்த அதிரடி முடிவு

thanthitv

Thiruvannamalai Police Issue | அம்பலமான பெண் SI - அஸ்ரா கார்க் IG எடுத்த அதிரடி முடிவு #thiruvannamalai #police #asragargips கைதியின் ஜிபே-வில் இருந்து பணம் திருடிய பெண் எஸ்.ஐ சஸ்பெண்ட் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில், கைதி ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து சட்டவிரோதமாகப் பணத்தைப் பரிமாற்றம் செய்த புகாரில் பெண் உதவி ஆய்வாளர் கவிதா தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் குட்கா வழக்கில் கைதான பாலமுரளி என்பவரிடமிருந்து செல்போன் மற்றும் வங்கி ரகசிய எண்களைப் பெற்ற காவல் ஆய்வாளர் லட்சுமி மற்றும் உதவி ஆய்வாளர் கவிதா, அவரது கணக்கிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயைத் தங்கள் ஆண் நண்பரான ராஜதுரை என்பவருக்கு ஜிபே மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. சிறையிலிருந்து வந்த பாலமுரளி இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் ஐஜி-யிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், முறைகேடு உறுதியானதால் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், உதவி ஆய்வாளர் கவிதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

DMK-Congress Alliance தொகுதிகள் ஒதுக்கிய பின்பும்.. காங்கிரஸ் செயலால் மீண்டும் பரபரப்பு

Anna University | அண்ணா பல்கலைகழகம் மாணவி பாலியல் புகார்.. பேராசிரியர் மீது பாய்ந்த நிர்வாகம்

TTV Dhinakaran || AMMK || அமமுக வேட்பாளர்கள் பட்டியல்? TTV தினகரன் கொடுத்த முக்கிய அப்டேட்

TN Election 2026 |முக்கிய தலைவர் பரபரப்பு அறிவிப்பு - தமிழகத்தில் 7 முனை போட்டி?

Nainar Nagendran | Annamalai | தொகுதி மாறினார் நயினார்.. அண்ணாமலை எங்கே?