தமிழ்நாடு

Marriage Reception | மேரேஜ் ரிசப்ஷனில் சக போலீசின் `அன்பளிப்பால்’ பெண் போலீசுக்கு விவாகரத்து

மேரேஜ் ரிசப்ஷனில் சக போலீசின் `அன்பளிப்பால்’ பெண் போலீசுக்கு விவாகரத்து

thanthitv

மேரேஜ் ரிசப்ஷனில் சக போலீசின் `அன்பளிப்பால்’ பெண் போலீசுக்கு விவகாரத்து - கருவை கலைத்து கடைசியில் வாழ்க்கையே அழிப்பு

கடலூரில், பெண் காவலரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை ஆல்பமாக வழங்கி, விவாகரத்துக்கு காரணமான ஆயுப்படை காவலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்... கடலூர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருபவர் சிவகுரு. 2017ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், 2019ம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை பெண் காவலருடன் நெருங்கி பழகி, பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது... திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் காவலர் வலியுறுத்திய நிலையில், அவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் சிவகுரு திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண் காவலர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அதற்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற சிவகுரு, பெண் காவலருடன் இருந்த நெருக்கமான புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார். இதனால் பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்த நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். பின்னர் மீண்டும் சிவகுருவுடன் வாழ்ந்த பெண் காவலர் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. அந்த கருவை கலைப்பதற்காக பெண் காவலர் தாலி மற்றும் மெட்டி அணிந்து சிதம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. ஆனால், சிவகுரு திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி, பெண் காவலர் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான ஆயுதப்படை காவலர் சிவகுருவை போலீசார் தேடி வருகின்றனர்..

CM Vijay | 3 புதிய அறிவிப்புகள்.. மிரளவிட்ட CM விஜய்

Vetri Payanam அமலாகிறது `வெற்றி பயண திட்டம்’ - சற்றும் எதிர்பாரா நேரத்தில் CM சர்ப்ரைஸ் அறிவிப்பு

Free Cylinder | CM Vijay | சிலிண்டர்கள் இலவசம்.. CM விஜய் அதிரடி அறிவிப்பு

TN Assemly | CM Vijay | நிசப்தமான பேரவை - ஒருகணம் எல்லோர் முகத்திலும் தெரிந்த துக்கம்

Megamalai Issue மேகமலை மக்களை வெளியேற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் - உள்ளே வந்த டீம்