கோடம்பாக்கம் ஜெயபாரதம் காலனியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் ஆந்திர மாநிலம் பீமாவரம் பகுதியில் இருந்து சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு வந்துள்ளார். எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற பிறகும் அவர் இறங்காததால் சந்தேகம் அடைந்த விஜயட்சுமியின் கணவர் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது விஜயலெட்சுமி மயங்கி நிலையில் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் விஜயலட்சுமி அணிந்திருந்த 35 சவரன் நகை மற்றும் 65 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.