தமிழ்நாடு

மலை கிராமங்களில் கொரோனா அச்சம்

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக மலை கிராமத்தின் சுற்று பாதைகளை மூங்கில் மரங்களை கொண்டு பழங்குடி பெண்கள் அடைத்துள்ளனர்.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக மலை கிராமத்தின் சுற்று பாதைகளை மூங்கில் மரங்களை கொண்டு பழங்குடி பெண்கள் அடைத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடலூர் அருகே உள்ள கோடமூலா கிராமத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் தங்களை தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி தங்கள் கிராமத்திற்கு வரும் அனைத்து சாலைகளிலும் மூங்கில் மரங்களை கொண்டு தடுப்பு வேலி அமைத்துள்ளனர். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை கூட கிராமத்திற்குள் அனுமதிப்பது இல்லை. மேலும், அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படும் கிராம மக்கள் அவர்களாகவே சாலை பகுதிக்கு வந்து பொருட்களை வாங்கி செல்லவேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்