சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப், தற்கொலையில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக அவரது தந்தை புகார் கூறியுள்ளார். டெல்லியில் அவர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்றும், விசாரணை சரியான முறையில் நடக்கவேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். அப்போது அமித்ஷா, தேவைப்பட்டால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உதவுவதாக உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார்.