Family Issue | குடும்ப தகராறில் மகனை ரூமில் போட்டு பூட்டிய தந்தை - எரிந்த நிலையில் சடலமாக மீட்பு | Thiruvallur
#familyissues #thiruvallur #thanthitv
தந்தையுடன் தகராறு - எரிந்த நிலையில் மகன் சடலமாக மீட்பு திருவள்ளூர் அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சரவணன். இவரது மூத்த மகன் ரோகித், கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்த ரோகித், நேற்று இரவும் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை அறையில் அடைத்து கதவைத் தாழிட்டதாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை அறையில் இருந்து புகை வந்ததால், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ரோகித் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.