தமிழ்நாடு

மகளின் வீட்டில் தங்கிய மருமகன்... கட்டையால் அடித்துக் கொன்ற மாமனார்.! விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே, மருமகனை கட்டையால் அடித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர்.

இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்ற இளைஞருக்கு, மாசாணம் என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளன. மனைவி மாசாணத்தின் தந்தை முத்துக்குட்டி என்பவர், கடந்த 6 மாதங்களாக மகளின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார். இதனால், மருமகனுக்கும், மாமனாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த முத்துக்குட்டி, மருமகன் என்றும் பாராமல் நாகராஜை, கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்