நதிகளை இணைக்க வேண்டும், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு சரியான கொள்முதல் விலை தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் போது ஒரு விவசாயிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.