சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் சிதம்பரம் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவித்துள்ளர். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.