கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இலவச நில பட்டாவை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்கத்தினர் முக்காடு போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளத்தூள்வாய்பட்டி கிராமத்தில் விதிமுறைகள் மீறி இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை ரத்து செய்து ஏழை,எளிய விவசாய மக்களுக்கு வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை, அவர்கள் முற்றுகையிட்டனர்.