தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட பி.ஆர். பாண்டியன், மரபணு திருத்தப்பட்ட விதைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மரபணு திருத்தப்பட்ட விதைக்கு தடை உள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மரபணு திருத்தப்பட்ட விதைகளின் ஆய்வுக்களமாக காவிரி டெல்டா மாவட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய அவர், இதுகுறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு வேளாண் குழுவை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.