தமிழ்நாடு

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயற்சி

நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மானூர் அருகே ரஸ்தா பகுதியைச் சேர்ந்த விவசாயி போதர் என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் மற்றொருவர் அத்துமீறி வீடு கட்டுவதாக கூறி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடக்கும் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தார். உடனே, போலீசாரும் பொதுமக்களும் அவரை மீட்டனர். தீயணைப்பு வாகனத்தில் இருந்து அவர் மீது தண்ணீர் அடிக்கப்பட்டது. பின்னர், அவரை பாளை காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்