ஓசூர் அருகே உள்ள ஒன்னேபுரம் மலை கிராமத்தில் மாடுகளை மேய்க்கச் சென்ற விவசாயி முனியப்பா, காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
யானை துரத்தி துரத்தி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியான நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.