தமிழ்நாடு

நிலத்தை தர மறுத்த விவசாயி! ஆள் வைத்து வெட்டிய ஊராட்சி தலைவியின் மகன்.. நெல்லையில் நடந்த வெறிச்செயல்!

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஊராட்சி மன்ற தலைவியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீரவநல்லூர் அருகே கொட்டாரக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கணேசன். 52 வயது விவசாயியான இவர், அப்பகுதியிலுள்ள ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை பல வருடங்களாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலத்தை அத்தாளநல்லூர் ஊராட்சி மன்ற தலைவி சிதம்பரத்தம்மாள் என்பவரின் மகன் ராஜகோபால் மீட்க முயன்றதாகவும், இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணேசன் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்த நிலையில், அவரை ஐந்து பேர் கொண்ட மர்மகும்பல் சரமாரியாக வெட்டிக்கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், கணேசனை ஊராட்சிமன்ற தலைவியின் மகன் ராஜகோபால் தான் ஆட்களை ஏவி கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், ராஜகோபாலை கைது செய்துள்ள போலீசார், மற்ற 4 நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்