தமிழ்நாடு

உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை, வீடு வழங்க பரிசீலனை - அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேலை - இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு வேலை - இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறை சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

உடல் உறுப்பு தானம் : தமிழகம் முதலிடம்

இதனிடையே, உடல் உறுப்பு தானத்தில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலம் 4 - வது முறையாக தமிழகம், இந்த விருதை தக்க வைத்துக்கொண்டுள்ளது. டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர்கள் அஸ்வினி குமார், அனுப்பிரியா பட்டேல் ஆகிய இருவரும் வழங்கிய விருதை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்