#madurai | #ebbill | #TNPDCL ரூ.500 கரண்ட் பில் வந்த வீட்டில் இப்போ ரூ.14,000 பில் வந்திருக்கு - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மின்கட்டணம் பல மடங்கு அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில், சோழவந்தான் 14-வது வார்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செந்தில் ராம் என்பவரது வீட்டில் உள்ள இரண்டு மின் இணைப்புகளுக்கும் கடந்த 40 ஆண்டுகளாக 200 முதல் 500 ரூபாய் வரை மட்டுமே மின்கட்டணம் வந்துள்ளது. ஆனால், 15 நாட்களுக்கும் மேலாக வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்த நிலையில், தற்போது இரண்டு இணைப்புகளுக்கும் சேர்த்து 14 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வந்துள்ளது. தொகையை உடனடியாகக் கட்டாவிட்டால் மின் இணைப்பைத் துண்டித்து விடுவோம் என அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகக் கூறும் செந்தில் ராம், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பொதுத்தேர்வு எழுதவுள்ள தனது இரு மகன்களின் படிப்பு பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்துள்ளார். எனவே, மின்கட்டணக் குளறுபடிகள் குறித்து மின்வாரியம் உரிய விசாரணை நடத்தித் தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.