தமிழ்நாடு

குடும்ப பொறுப்புகளைச் நிறைவேற்றி வந்த குடும்பத் தலைவன்

தந்தி டிவி

குடும்ப பொறுப்புகளைச் நிறைவேற்றி வந்த குடும்பத் தலைவன்

ஆயக்குடி அருகே உள்ள கம்பளி பகுதியைச் சேர்ந்த முருகேசன் குடும்பத்துடன் வசித்து வந்தார். மூத்த மகளுக்குத் திருமணம் செய்து வைத்து இருக்கிறார். இளைய மகனை கல்லூரி படிப்பை முடிக்க வைத்து இருக்கிறார். தனக்கு வருகின்ற வருமானத்துக்குள் குடும்பத் தலைவரின் கடமைகளை ஓரளவுக்கு நிறைவேற்றி வந்து இருக்கிறார் முருகேசன்.

கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய தருணம் தான் அவரது வாழ்க்கையவே புரட்டிப் போட்டு இருக்கிறது.

முதுகுத் தண்டில் பலத்த அடி பட்டதால் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி முருகேசனுக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டு இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களின் முகமே அடிக்கடி மறந்து போகும் அளவுக்கு நினைவு இழப்பால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்து இருக்கிறார்.

குடும்பத் தலைவரைப் புரட்டிப் போட்ட சாலை விபத்து

முன்பு போல வேலைகளைச் சரியாகப் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், தான் வேலை பார்த்து வந்த தொண்டு நிறுவனத்திற்கும் செல்லாமல் இருந்து இருக்கிறார். இதன் காரணமாக கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார் அவர்..

வயதான காலத்திலும் விவசாயம் செய்து விவசாய தோட்டத்தில் தனியாக வசித்து வரும் தனது தாய் சுடலை மாடத்தி மற்றும் தந்தை பரமசிவன் வீட்டிற்குச் சென்று இருக்கிறார் முருகேசன். பெற்றோர்களிடம் தன்னை யாரும் சரியாகக் கவனிப்பதில்லை எனக் கூறி மனமுடைந்து அழுது இருக்கிறார்.

தாய் எடுத்த முடிவால் பறிபோன மூன்று உயிர்கள்

மகன் படும் வேதனை கண்டு மனம் வெதும்பிய பெற்றோர்கள் இறுதியாக அந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளனர். மகனுக்கு வாழைப்பழத்தில் குருணை மருந்தைக் கலந்து கொடுத்து இருக்கிறார் தாய். மகன் மயங்கி கீழே சரிய அடுத்த சில நிமிடங்களில் பெற்றோர்களும் சரிந்து கீழே விழுந்து உயிரிழந்து உள்ளனர்.

இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களையும், முருகேசன் குடும்பத்தையும் கடும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்