மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவர் கவிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததோடு, விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கவிதாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்ட முத்துகுமார், தனது மாமியார் லெட்சுமியின் காதை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. அலறி துடித்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக முத்துக்குமாரை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.