தமிழ்நாடு

சுஜித் படத்திற்கு பதிலாக மற்றொரு சிறுவனின் புகைப்படம் : தவறாக பகிர்ந்த படங்களை நீக்கவும் சிறுவனின் பெற்றோர் கோரிக்கை

சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வெளியான படத்தில் இருப்பது சுஜித் அல்ல என்றும், அந்த படங்களை நீக்க வேண்டும் என படத்தில் இருக்கும் சிறுவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் ஒரு குழந்தையின் படம் பகிரப்பட்டு வந்தது. ஆனால் அந்த வீடியோவிலும், புகைப்படத்திலும் இருந்தது சுஜித் அல்ல என்று அந்த குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தை சேர்ந்த முனிவேல், சுகன்யாவின் 2 வயது மகனான நித்திஷ் படங்களே சுஜித் என்ற பெயரில் பதிவாகி வந்துள்ளது. தங்கள் மகனின் படத்திற்கு அஞ்சலி செலுத்துவது போல வெளியான செய்திகளால் மிகுந்த மனவேதனை அடைந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தவறாக பகிரப்பட்ட அந்த படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்