தமிழ்நாடு

இளம்பெண்களை பலாத்காரம் செய்ததாக போலி சாமியார் கைது...

மாந்திரீகம் செய்வதாகக் கூறி இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலி சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

காஞ்சிபுரம் சூணாம்பேடு கிராமத்தை சேர்ந்த மணி என்கிற செல்வமணி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூரில் மாந்​திரீகம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மனைவியை பிரிந்த செல்வமணி, பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் பகுதிகளில் பில்லி, சூனியம் செய்து, நல்ல வருமானம் ஈட்டியுள்ளார். தம்மிடம் மாந்திரீகம் செய்ய வரும் இளம் பெண்களையும் குடும்ப பெண்களையும் தம்மோடு மாதக் கணக்கில் தங்க வைத்துள்ளார். தனது விருப்பத்துக்கு இணங்க வைத்த மணி, எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அம்பலமாகியுள்ளது. மாந்திரீகம் என்ற பெயரில் பெண்களை வாழ்வை சூறையாடும் செல்வமணியின் வாழ்க்கை தொடர்​ந்து கொண்டிருந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் வடமணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மகளுக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க மாந்திரீகம் செய்யுமாறு செல்வமணியை நாடியுள்ளார். அப்போது, அந்த இளம்பெண்ணை தம்மோடு தங்க வைத்து மாந்திரீகம் செய்ய வேண்டி இருப்பதாக செல்வமணி கூறியுள்ளார். மகளை செல்வமணியுடன் அனுப்பி ஓராண்டாகியும் திரும்ப அனுப்பாததால் திரும்ப அனுப்புமாறு, அந்த பெண்ணின் தந்தை கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாந்திரீக செல்வமணி, அந்த பெண்ணை தமக்கு திருமணம் செய்து வைக்குமாறு, பெண்ணின் தந்தையை மிரட்டியுள்ளார். இதனிடையே, அந்தப் பெண்ணை மாந்திரீக செல்வமணி, பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தந்தை, போலீஸில் புகாரளித்தார். உடனடியாக களமிறங்கிய போலீசார் மாந்திரீக செல்வமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹேமா ஆகியோரை கைது செய்தனர். மாந்திரீகம் செய்வதாக, பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய சம்பவம் அறிந்து அப்பகுதியினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி