சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த சந்திரசேகர், அதே பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. ஒருகட்டத்தில், தனலெட்சுமிக்கு வேறொருவருடன் நெருக்கம் ஏற்பட்டதால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சந்திரசேகர் தனலட்சுமியை விட்டு விலகியுள்ளார். இந்தநிலையில், சந்திரசேகர் தனது வேனில் தூங்கிகொண்டிருந்த போது, தன் தாய் மற்றும் மகளுடன் வந்த தனலட்சுமி, தன்னுடன் சேர்ந்து வாழுமாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர், வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து அவர்களை தாக்கியுள்ளார். இதில், தனலட்சுமியின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனலட்சுமி மற்றும் அவரின் மகள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்திரசேகரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.