தமிழ்நாடு

போலி நகைகளை கொடுத்து ஒரிஜினல் தங்கத்தை வாங்கி சென்ற கேடி பெண்கள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

குளச்சல் அருகே, நகை கடை ஒன்றில் 4 சவரன் தங்க நகையை நூதன முறையில் மோசடி செய்த பெண்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள தும்பக்காட்டுவிளை பகுதியில் அபுபக்கர் சித்திக் என்பவர் நகை கடை நடத்தி வருகின்றார். இவரது கடைக்கு நகை வாங்க வந்த 2 பெண்கள், 5 சவரன் நகையை கொடுத்து, 4 சவரன் தங்க நகைகளை வாங்கிச் சென்றனர். மாற்றலாக வந்த நகையை, அபுபக்கர் சோதனை செய்த போது, போலி நகை என தெரியவந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மோசடி செய்த பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்