தமிழ்நாடு

நடிகர் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் பெயரில் போலி கணக்கு... பொதுமக்களிடம் இருந்து பண மோசடி

தந்தி டிவி

சமூக வலைதளத்தில் ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் போலி கணக்கு தொடங்கி, சிலர் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்து வருவதாகவும், இதனால் நடிகர் ரஜினிகாந்த் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், குறிப்பாக, குலுக்கல் ஒன்றை நடத்தி 200 நபர்களை தேர்வு செய்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்களை தருவதாகக் கூறி, முன்பணம் என்ற பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்ற பெயரை பயன்படுத்துதல், ஐடி பிரிவு உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக, மோசடி கும்பல் அளித்த வங்கி கணக்கை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்