தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துகளில் வசதிகள் : போக்குவரத்து செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்துவது குறித்து போக்குவரத்து துறை செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதி ஏற்படுத்தி தர கோரி முருகானந்தம், ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சி.வி. கார்த்திகேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ப பேருந்துகளை மாற்றியமைப்பது குறித்து மாதம் ஒரு முறை துறை சார்ந்த அதிகாரிகளுடன் போக்குவரத்து துறை செயலாளர் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை 4 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"