தமிழ்நாடு

அதிவேகத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் செயலி 'பேஸ்டேக்கர்'

அதிவேகத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் பேஸ்டேக்கர் என்னும் செயலி போலீசாருக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

தந்தி டிவி

அதிவேகத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் செயலி 'பேஸ்டேக்கர்'

சென்னை காவல்துறை குற்றங்களைத் தடுக்கும் விதமாகவும், குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளவும் "பேஸ்டேக்கர்" என்னும் செயலி கடந்த ஆண்டு தி நகர் காவல் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சென்னையில் 90 சதவீத காவல்நிலையங்களில் இது பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியானது ஒவ்வொரு போலீசாரின் செல்போனில் நிறுவப்பட்டிருக்கும். காவலர்கள் சந்தேகப்படும் நபர்களை பார்த்தால், அவர்களை புகைப்படம் எடுத்து செயலியில் இணைத்தால் போதும். அவர்களின் குற்றப்பின்னணி குறித்த அனைத்து விவரங்களும் அடுத்த நொடியே கிடைத்துவிடும். வளசரவாக்கம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 55 வயது முதியவர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்து. அதனை இந்த செயலி மூலம் இணைத்து ஆய்வு செய்த போது, 15 ஆண்டுகளுக்கு முன்பு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட பர்மா சீனிவாசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாடு குற்ற ஆவணக்காப்பகம் சுமார் 60 ஆயிரம் குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் குற்றங்கள் அடங்கிய வழக்குகள் குறித்த டேட்டாவை இந்த செயலிக்காக அளித்ததாக இதனை வடிவமைத்த விஜய் ஞானதேசிகன் தெரிவித்துள்ளளார்.

* "புகைப்படம் எடுத்தவுடன் குற்றப்பின்னணி குறித்து தகவல்"

* "சுமார் 67,000 பேர் தொடர்பான தகவல் உள்ளது"

* "குற்றவாளிகள் தொடர்பான தகவல் அளிக்கும் நேரம் மிகக்குறைவு"

அந்த செயலியில் 4 லட்சம் மாயமான குழந்தைகளின் புகைப்படங்கள் உள்ளதாகவும், இந்த செயலி மூலம் சுமார் 200 காணாமல் போன குழந்தைகளை அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து அரசின் புலனாய்வு நிறுவனங்கள் கேட்டுகொண்டதை தொடர்ந்து பே​ஸ்டாக் செயலியை வடிவமைத்து அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"குழந்தைகள் பிச்சை எடுப்பதை பார்த்தேன். மாயமான குழந்தைகள் குறித்த தகவல் சேகரித்தேன். எங்கள் பயணம் இப்படித்தான் தொடங்கியது என தெரிவித்துள்ளார்"

கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த செயலியின் உதவியை நாடியுள்ளதாகவும் விஜய் ஞானதேசிகன் கூறியுள்ளார். குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்பட்டு அவர்களின் குற்றங்களை நொடிப்பொழுதில் கொண்டுவரும் இந்த செயலியானது காவல்துறையினருக்கு ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி