தமிழ்நாடு

முகம் காணாத 10 மாத இன்ஸ்டாகிராம் காதல் - காதலி பேச மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை ...

ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்த காதலி பேச மறுத்ததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

தந்தி டிவி

நாளுக்கு நாள் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், சமூகவலை தளங்களின் மூலம் இளைஞர்கள் காதல்வயப்படுது இயல்பாகி விட்டது. நேரில் பார்த்து, குணமறிந்து காதலிக்கும் காலம் போய், வாட்ஸ் ஆப், பேஸ்புக் இன்ஸ்டா கிராம் போன்ற சமூகவலைதளம் மூலம் காதலிப்பது பேஷனாகி விட்டது. இப்படி தொடரும் காதல் நீண்ட நாள் நிலைத்திருப்பதில்லை. அதன் முடிவு தற்கொலையில் விட்டு விடுகிறது என்பதற்கு உதாரணம் இவர். சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி சேர்ந்த சந்திரசேகர் இவரது மகன் 23 வயதான ஆனந்தகுமார், வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார்,சம்பவ இடத்திற்கு வந்து,உடலை உடற்கூறு ஆய்விற்காக சடலத்தை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதன் பின் நடத்திய விசாரணையின்போது, ஆனந்தகுமார் எழுதி வைத்திருந்த கடித்தை கைப்பற்றியோடு, அவர் பயன்படுத்திய சொல்போன் மற்றும் சமூகவலைதளத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது, ஆனந்தகுமார் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு, தனது இன்ஸ்டாகிராம் காதலி குறித்த தகவல்கள், போட்டோக்கள் ஆடியோக்கள் என அனைத்து பதிவுகளை தனது போனில் அழித்துள்ளார். இறுதியாக அந்த பெண்ணிடம் வாட்ஸப்பில் பேசிய ஒரே ஒரு ஆடியோ பதிவு மட்டுமே போலீசாரிடம் சிக்கியுள்ளது. அதில் நீங்க இல்லாம என்னால இருக்க முடியல, சத்தியமா செத்துவிடுவேன், பேசுங்க ,பேசுங்க என அவர் உருக்கமாக பேசி, அந்த பெண்ணின் வாட்ஸ்அப்பிற்கு மெசேஜ் செய்துள்ளார். வலைதளத்தில் பொழுது போக்கியபோது, ஆனந்த குமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில்

காதலாக மாறி மணிக்கணக்கில் இணையதளத்தில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராமில் காதலி, தன்னுடன் சரிவர பேசவில்லை என மனமுடைந்து விரக்தி இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில், தன்னை பிளாக் லிஸ்ட்டில் போட்டுவிட்டதால் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வந்துள்ளார் மனமுடைந்த ஆனந்தகுமார், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் இறந்த பிறகு தன்னால் தனது காதலிக்கு எந்த இன்னல்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த பதிவுகள் அனைத்தையும் அழித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த காதலி, பேச மறுத்ததால், இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்