தமிழ்நாடு

சென்னை ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி.. இளம் பெண் டாக்டர் மரணம்

தந்தி டிவி

சென்னை கீழ்ப்பாக்கம் நியூஆவடி சாலை பகுதியைச் சேர்ந்த அன்விதா, தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த இவர், புதன்கிழமை சென்றபோது, உடற்பயிற்சிக் கூடத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது, அதே கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், முதலுதவி சிகிச்சை அளித்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனலிக்காமல் அவர் உயிரிழந்தார். இதனிடையே, ஒருவர் ஆரோக்கியமாக இருந்தாலும், மனதளவில் அழுத்தத்துடன் இருந்தால் மாரடைப்பு வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், ரத்தக் குழாய்களில் பாதிப்பு இல்லாத அளவுக்கு அடைப்புகள் இருந்து, அதிக எடைகொண்ட பொருட்களை தூக்கும்போதும், அதிதீவிரமாக உடற்பயிற்சி மேற்கொள்ளும்போதும், மூளைக்கு ரத்தம் போகமால் மயங்குவதற்கும், மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Breaking | Perambur Incident | பெரம்பூரில் சூட்கேசில் உடல்.. செங்கல்பட்டில் வீசப்பட்ட தலை..

Minister Ramesh | TVK | கோயில்களில் புதிய தரிசன டோக்கன் முறை - இன்ச் பை இன்ச் விளக்கும் அமைச்சர்

Actor Ajithkumar | AK | Racing | அறிவித்தார் நடிகர் அஜித்குமார்

Breaking | Nirmal Kumar | ஸ்மார்ட் மீட்டர் திட்டம் | இன்ச் பை இன்ச் விளக்கிய அமைச்சர் நிர்மல்குமார்

Breaking | Temple | கோயில்களில் சிறப்பு தரிசன டிக்கெட் | அமைச்சர் ரமேஷ் முக்கிய அப்டேட்