தமிழ்நாடு

காட்டுப்பன்றி வேட்டையில் வெடி விபத்து - பழங்குடியின பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

காட்டுப்பன்றி வேட்டையில் வெடி விபத்து - பழங்குடியின பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரி கூடப்பாக்கம் அருகே காட்டு பன்றியை வேட்டையாடி விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது பன்றியை தாக்க வைத்திருந்த வெடி மருந்து வெடித்ததில் பழங்குடியின பெண் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழக்கும் மேலும் ஒரு பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

மேலும் வெடி மருந்து பொருட்களை தமிழகப் பகுதியான விழுப்புரம், பெருமுக்கல் பகுதியில் வாங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

புதுச்சேரி, சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழங்குடி ( நரிக்குறவர்கள்) இனத்தைச் சேர்ந்தவர் அமாவாசை இவரது மனைவி ஜெரினா(52), இவர் இன்று அதிகாலை தனது மருமகன் பாண்டியனுடன்(40), தமிழகப் பகுதியான வழுதாவூரில் காட்டுப்பன்றியை வேட்டையாடியுள்ளனர். மேலும் பன்றி தாக்க வந்தால் அதன் மீது வீசுவதற்கு வெடி மருந்தை அவர்கள் எடுத்துச் சென்றனர்.

இதனிடையே பன்றியை வேட்டையாடி விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வில்லியனூர், மூர்த்தி நகரில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்பொழுது இருசக்கர வாகனம் கூடப்பாக்கம் அருகே வந்தபோது, சாலையில் இருந்த வேக தடையின் மீது ஏறியதில் வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளது.

இதில் பன்றியை வேட்டையாடி விட்டு மீதமிருந்த வெடி மருந்து வெடித்ததில் ஜெரினா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மருமகன் பாண்டியன் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விபத்து குறித்து பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில் தற்போது உயிரிழந்த பழங்குடியின பெண் ரெஜினா வெடி விபத்தில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உடல் சிதறி உயிரிழக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அருகே உள்ள பெருமுக்கல் பகுதியில் பட்டாசு தொழில் செய்பவர்களிடம் வெடி மருந்து பொருட்களை வாங்கி பயன்படுத்தியதும் அதன்படி காட்டுப் பன்றியை வேட்டையாடிய பிறகு மீதமிருந்த சுமார் 400 கிராம் வெடி மருந்து பொருட்களை இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்