பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள வன உயிரியல் பூங்கா வித்தியாசமான ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது. முன்னாள் காதலன் அல்லது காதலியை பழிவாங்க நினைப்பவர்கள் தங்களை அணுகலாம் என அறிவித்துள்ள மெம்பிஸ் வன உயிரியல் பூங்கா, பார்வையாளர்கள் சொல்லும் நபருக்கு யானை சாணமிடும் வீடியோவை அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் கூறி கதிகலங்க வைத்துள்ளது. இதனை பயன்படுத்தி முன்னாள் காதலனுக்கோ காதலிக்கோ யானை சாணமிடும் வீடியோவை அனுப்பலாம் என கூறியுள்ள உயிரியல் பூங்கா நிர்வாகம், இதற்காக 800 ரூபாய் வசூலிக்கப்படும் என கூறியிருப்பது தான் இதில் ஹைலைட்...