தமிழ்நாடு

"பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள்" - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு

தந்தி டி.வி.யில் வெளியான செய்தியின் எதிரொலியாக, அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளிவிவரங்களை சரியான முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தந்தி டிவி

சட்டப்பேரவையில் நடந்த பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் புள்ளி விவரங்கள் அடங்கிய ஆவண புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அரசு பள்ளிகளில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில், 4 லட்சத்து 15 ஆயிரம் மாணவர்களும் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளில் கடந்த ஆண்டைவிட 42 லட்சம் மாணவர்களும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதுதொடர்பான செய்தி தந்தி டி.வி.யில் நேற்று ஒளிபரப்பப்பட்டது.

இதனயைடுத்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவசர சுற்றறிக்கை ஒன்றை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ளார்.

அதில் கல்வித்துறை மாநில தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்கள் குறித்த விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்ய வில்லை என்றும் சரியாக பதிவேற்றம் செய்யாத சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் குறித்த சரியான புள்ளி விவரங்களை வரும் 24ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்