தமிழ்நாடு

சின்னதம்பி குடும்பத்தோடு வலம்வரும் பிரத்யேக காட்சி...

காட்டுயானை சின்னதம்பி காட்சிப்பொருளாய் இன்று கண்ணாடிப்புதூரில் நிற்க காரணம் என்ன? கோவை மாவட்டம் தடாகம் பகுதி மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பிரத்யேக காட்சிகள்.

தந்தி டிவி

கண்ணாடிப்புதூர் மக்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத இந்த காட்டுயானை சின்னதம்பி, கோவை மாவட்டத்தின் ஆனைக்கட்டி,தடாகம், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், அனுவாவி , சுப்ரமணியர் கோவில், தடாகம் செங்கல்சூளை, மாங்கரை சோதனைசாவடி பகுதி மக்களுக்கு மிகவும் அறிமுகம். கண்ணாடிப்புதூர் மக்களுக்கு காட்சிப்பொருளாய் இந்த காட்டு யானை ஊரில் வந்து நிற்க என்ன காரணம்? இத்தனை வெடித்தாக்குதலுக்கு ஆளான சின்னதம்பி மிரளாமல் சகஜமாய் கடந்து அநாயாசமாய் சமாளித்து நிற்பது எப்படி சாத்தியமானது? கேள்விகள் ஆர்வத்தை உண்டாக்க அந்த பகுதி மக்களிடம் விசாரித்த போது சில வீடியோ காட்சிகள் நமக்கு கிடைத்தது.

வழித்தடங்களில் பயணிக்கும் சின்னத்ம்பி யானைக்குடும்பத்தோடு அப்பகுதி மக்கள் ஆர்வமாக பழகவும் தொடங்கியிருக்கின்றனர். சொல்வதை புரிந்துக்கொள்ளும் அளவிற்கு இவைகள் பழகத்தொடங்கியிருக்கின்றன. கட்டயன்,கொம்பன், கூர்மூக்கன்,பெரிய தம்பி, சின்ன தம்பி, விநாயகன், ஊசிக்கொம்பன் என யானைகளுக்கு அடையாளம் வைத்து பெயர் வைப்பதும் அவை புரிந்துக்கொண்டு நடப்பதும் என சுமுகமாகத்தான் இருந்தது. இந்த சுப்ரமணியர் கோவில் இந்த சின்ன தம்பிக்கு மட்டுமல்ல, அவை குடும்பத்தோடு வந்து செல்லும் இடமே. இவர்களிடம் விசாரித்தால் சின்னதம்பியின் குடும்பத்து யானைகள் எப்போது எப்படியெல்லாம் இறந்தது என துல்லியமாக வேதனையோடு பகிரும் போது அங்கே காட்டுக்குள் என்ன நடக்கிறது என கேட்டோம். அதற்கு பதில் தான் பின் வரும் காட்சிகள்..

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி