தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு... தேர்தல் நடத்தும் அலுவலர் மீது புகார்

வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு... தேர்தல் நடத்தும் அலுவலர் மீது புகார்

தந்தி டிவி

வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு... தேர்தல் நடத்தும் அலுவலர் மீது புகார்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையத்திற்கு தபால் ஓட்டு படிவத்துடன் தேர்தல் நடத்தும் அலுவலர் வந்ததாக புகார் எழுந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள், அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் இந்த மையத்திற்கு வந்த வேடசந்தூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம், தபால் ஓட்டு படிவங்கள், வாக்கு இயந்திரத்தில் ஒட்டப்படும் அட்டை உள்ளிட்டவை இருந்துள்ளன. இதனை கண்காணிப்பு கேமராவில் பார்த்த திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அவர் வைத்திருந்த படிவங்களை வாங்கி கிழித்தெறிந்து மற்ற பொருட்களை பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விளக்கம் கேட்ட போது தாலுகா அலுவலகத்தில் இருந்து தவறுதலாக எடுத்து வந்துவிட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த திமுகவினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’