தமிழ்நாடு

பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலருக்கு சிறை

தந்தி டிவி

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் செயலருக்கு 2 வார சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர்

கல்வித்துறை சார்ந்த பண பலன்கள் கோரி, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 2019ம் ஆண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என கூறப்படும் நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது, மனுதாரர் வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் உள்ளிட்ட 3 பேருக்கு 2 வார சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக மூன்று நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், வரும் 9-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக, மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்..

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்

LPG Shortage | "சிலிண்டர் பெற.." - மத்திய அரசு முக்கிய தகவல்

TVK Vijay | Airport | விஜய் பையில் இருந்த பொருள்? - ஏர்போர்ட்டில் பரபரப்பு