தமிழ்நாடு

இ.வி.எம்- 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்... அதிமுகவினருக்கு அக்கட்சியின் தலைமை வேண்டுகோள்

இ.வி.எம்- 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்... அதிமுகவினருக்கு அக்கட்சியின் தலைமை வேண்டுகோள்

தந்தி டிவி

வாக்குப்பதிவு இயந்திரங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என அதிமுகவினருக்கு அக்கட்சியின் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிடுள்ளனர். அதில் தமிழகத்தில் தேர்தலை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தந்த அதிமுகவினர் மற்றும் தோழமை கட்சியினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.எனவே அதுவரை அதிமுக வேட்பாளர்கள், நிர்வாகிகள், முகவர்கள், கூட்டணி கட்சியினர் வாக்கு எண்ணும் மையங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.மிகுந்த எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன், இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்