ஈரோடு திரு.வி.க வீதியில் அண்மையில் திறக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தை வரவேற்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பிரதமர் நரேந்திர மோடி சி.பி.ஐ-யை ஏவி விடுவதாகவும் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்தது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட இளங்கோவன், அவர் அனைவரையும் அரவணைத்து செல்வார் என்றார்.