தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி - விடுதிகளில் முன்பதிவு செய்வோர் அதிகரிப்பு | Erode Election | Thanthi TV

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் முன் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வரும் பிப்ரவரி 5-ம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. என பல முனைப்போட்டி நிலவி வருகிறது. இதனால், அந்தந்த கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ஈரோடு வரவுள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட மேட்டூர் சாலை, சக்தி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகளில், முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 20 நாட்களுக்கு விடுதிகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | TVK Vijay | பரபரக்கும் கூட்டணி விவகாரம் | ஒருநாள் முன்பே டெல்லி கிளம்பிய விஜய்

Thirumavalavan | சர்ப்ரைஸாக திருமா திடீர் சந்திப்பு - பரபரக்கும் அரசியல் களம்

Manamadurai Akash Case | பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மானாமதுரை ஆகாஷ் மரணம் - அதிரடியாக மாற்றம்

LPG Shortage | CM Stalin நாடே அவதிப்படும் நிலையில்.. தமிழக மக்களுக்காக CM ஸ்டாலின் `அதிரடி சலுகைகள்’