ஈரோடு சென்னிமலையில் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்பம் அளித்த சதாம் என்பவரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். ஓட்டுனராக பணியாற்றி வரும், சதாம், மணல்மேடு பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடந்த 24ம் தேதி காலை வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில், ஈடுபட்டுள்ளார். பின்னர், வீடு திரும்பிய உடன், பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சதாமை, ஈரோடு மகளிர் போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.