ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி , மொடக்குறிச்சி , எழுமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வழியாக 66 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.
இதனிடையே உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ள விளை நில உரிமையாளர்களில் 33 பேர் அரசு வழங்கும் இழப்பீட்டு தொகையை பெற சம்மதித்தனர் முதல்கட்டமாக 8 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. நேற்று மேலும் 3 பேருக்கு இழப்பீட்டு தொகையாக 16 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.