Erode | TN Rains | பவானியில் கனமழை - வீடுகளுக்குள் புகுந்த சாக்கடை நீர் #Erode #TNRains #HeavyRain #Flood ஈரோடு மாவட்டம் பவானியில் பெய்த கனமழையால், குடியிருப்புப் பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் திருவள்ளுவர் நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து முழங்கால் அளவுக்குத் தேங்கியது. மேலும், சில வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்ததால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கால்வாய்களைத் தூர்வாரி, நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.