தமிழ்நாடு

கல்லூரி மாணவியை மிரட்டி 4 ஆண்டுகளாக பலாத்காரம்

ஈரோடு அருகே ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி, பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், மாணவிகள் பலர் புகார் அளித்து வருவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திண்டல் பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் எதிரே உள்ள கடைகளுக்கு அடிக்கடி வந்து செல்பவர், வில்லரசம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.திருமணமான இவர், கடைகளுக்கு வரும் கல்லூரி மாணவிகளை தன் வலையில் வீழ்த்தி வந்ததாக கூறப்படுகிறத. 2015-ஆம் ஆண்டு அந்த கல்லூரியில் படித்த மாணவி ஒருவர், ராதாகிருஷ்ணன் அன்பான பேச்சில் மயங்கியுள்ளார். மாணவியின் பிறந்த நாளை கொண்டாட ஏற்காடு வரை அழைத்துச் சென்ற அவர், அப்போது, நெருக்கமாக இருந்து செல்போனில் படம்பிடித்துள்ளார்.மாணவியுடனான நெருக்கமான படங்களை, வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டிய ராதாகிருஷ்ணன், ஆசைக்கு இணங்க வைத்ததாக சொல்லப்படுகிறது.

அதையும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட ராதாகிருஷ்ணன், 4 ஆண்டுகளாக அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 2 முறை கர்ப்பமடைந்த மாணவியை அழைத்து சென்று, ராதாகிருஷ்ணன் கருக்கலைப்பும் செய்திருக்கிறார். ஆசை அடங்காத ராதாகிருஷ்ணன், மாணவியின் தோழிகளுக்கும் வலை வீசியுள்ளார். அதுமட்டுமின்றி, தனது நண்பர்களுக்கும் மாணவியை விருந்தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.இதனிடையே, விசயமறிந்து பதறிப்போன, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ராதாகிருஷ்ணனை 4 பிரிவுகளின் கீழ் கைது செய்த போலீசார், ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனர்.திருமணமான ராதாகிருஷ்ணன், கல்லூரி மாணவிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமைகளை செய்ததாக மேலும் புகார்கள் வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திண்டல் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்